கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து...! - 3 பேர் பலி
Car loses control and crashes into tree horrific accident 3 dead
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரில் பயணித்த 4 பேருடன் சென்ற வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த மூவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
Car loses control and crashes into tree horrific accident 3 dead