ரத்ததானமாக மாறிய தேசிய தினம்...! பஹ்ரைனில் தவெக விஜய் இயக்கம்...!
National Day turned into blood donation tvk Vijay movement Bahrain
மேற்கு ஆசிய தீவு நாடான பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் சல்மானிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை வெற்றிகரமாக நடத்தின
இந்த மனிதநேய முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டு, தன்னார்வமாக ரத்ததானம் செய்து உயிர் காக்கும் பணியில் பங்களித்தனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,“மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தலைவர் விஜய் அவர்களின் வாழ்த்துகளுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பஹ்ரைன் 54-வது தேசிய தினத்தை ஒட்டி இந்த ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ரத்ததானத்தில் பங்கேற்ற அனைத்து தொண்டர்களுக்கும், பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்!”என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த முகாம், சமூக சேவையில் கழகத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் – பஹ்ரைன்
பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம்
English Summary
National Day turned into blood donation tvk Vijay movement Bahrain