பெண் ஊழியருக்கு தினமும் ‘COD’ பார்சல் டார்ச்சர்..! -கோவையில் டிஜிட்டல் நிறுவனர் சிக்கினார் - Seithipunal
Seithipunal


கோவையைச் சேர்ந்த 39 வயதான சதீஷ்குமார், தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், முன்னாள் பெண் ஊழியருக்கு எதிராக அருவருப்பான தொல்லையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனது நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய அந்த பெண்ணின் பெயரை பயன்படுத்தி, தினமும் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் 100க்கும் மேற்பட்ட பார்சல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி, டெலிவரி முகவரியில் அந்த பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்து, அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய நடவடிக்கையில், டிஜிட்டல் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female employee tortured COD parcels every day Digital founder caught Coimbatore


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->