போராட்டக்காரர்கள் மீது வழக்கா...? - திருப்பூர் குப்பைக் கிடங்கு விவகாரத்தில் தினகரன் கடும் கண்டனம்...!
Case against protesters Dinakaran strongly condemns Tiruppur garbage dump issue
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) தள பதிவில், திருப்பூர் மாவட்டம் இடுவாய் அருகே சின்னகாளி பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த குப்பைக் கிடங்கு, நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் உறுதியாக போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கடையடைப்பு, கிராமசபை தீர்மானம் என ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், பணிகளை தொடர்வதும், போராட்டக்காரர்களை கைது செய்வதும் அடக்குமுறையின் உச்சம் என தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
எனவே, போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கு எதிரான குப்பைக் கிடங்கு திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Case against protesters Dinakaran strongly condemns Tiruppur garbage dump issue