இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவு! பாகிஸ்தானை போல மதவாத காரிருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார் மோடி - திமுக அமைச்சர் விமர்சனம்! - Seithipunal
Seithipunal



திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு இல்லாதது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவு! 

ஜி-7 நாடுகளில் இந்தியா உறுப்பினராக இல்லையென்றாலும், உலகளாவிய பொருளாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு விவாதங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை சிறப்பு விருந்தினர் நாடாக இந்தியா பங்கேற்று வருகிறது. 

மோடி அரசின் மதவாத கொள்கை, அடிப்படைவாதம், சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டுதல் போன்ற எதிர்மறை நிலைப்பாடுகள், பொருளாதாரம், காலநிலை மாற்றம், பாதுகாப்பு போன்றவற்றில் தவறான அணுகுமுறை ஆகியவற்றால் இந்தியா மேல்நாடுகளின் மத்தியில் நற்பெயரை இழந்து வருவதை ஜி-7 பிரதிபலிக்கிறது. 

நாட்டை முற்போக்கு பாதையில் வழிநடத்தாமல் - பாகிஸ்தானைப் போன்று மதவாதம் எனும் பிற்போக்குத்தனமான காரிருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார் மோடி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister mano Thangaraj condemn to PM Modi BJP


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->