சூர்யா 46 படத்தின் புதிய அப்டேட் தெரியுமா?
Do you know new update Surya 46
பிரபல நடிகர் 'சூர்யா' தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகரும் இயக்குனருமான 'ஆர்.ஜே.பாலாஜி' இயக்குகிறார்.மேலும், இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் 'வெங்கி அட்லூரி' இயக்குகிறார்.

இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு இணைந்துள்ளார். மேலும், ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.இதற்கிடையில், கடந்த மாதம் 19-ந் தேதி 'சூர்யா 46' படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது.
அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதனால் சூர்யா 46 படக்குழுவினர் பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஏற்கனவே 'சூர்யா 46' படத்திற்கு பூஜை நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டிலும் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக பழனியில் எளிமையான முறையில் திரைக்கதையை வைத்து வழிபாடு செய்தது படக்குழு.இந்நிலையில் சூர்யாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு வரும் 9ம் தேதியில் இருந்து தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
English Summary
Do you know new update Surya 46