கொரோனவினால் தள்ளாடும் திமுக! பொய் செய்தியை பரப்பிய ஸ்டாலின்!
DMK leader stalin twit with false information
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது உலுக்கி கொண்டிருக்கிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளோம். மூன்றரை லட்சம் பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வந்தாலும் இந்தியாவில் அதனுடைய தாக்கம் ஆனது குறைவாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா அச்சம் தமிழகத்தில் தொடங்கியது முதலே தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக தனது செயல்பாட்டில் தள்ளாட்டம் கண்டு வருகிறது. ஆனால் அதே சமயம் பாமகவின் செயல்பாடு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா வரும் முன்னரே மூன்று வாரம் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி வலியுறுத்தி வந்தார். தொடர்ச்சியாக இன்றுவரை அவர் வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிப்ரவரி 11 ஆம் தேதியே மாநிலங்களவையில் அன்புமணி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல மார்ச் 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட ஒருநாள் மக்கள் சுய ஊரடங்கு, அதை அடுத்து மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலையோரம் வசிக்கும் குடும்பங்கள் ஆகியோருக்கு நிதி உதவி கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இதில் அனைத்திலும் கோட்டைவிட்ட திமுக, அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை சொல்லக்கூடிய எந்தவித செயலையோ, அறிக்கையையோ முன்கூட்டியே வெளியிட முடியாத அளவிற்கு திணறி வந்தது. ஆனால் சட்டசபையை மட்டும் ஒத்திவைக்க வேண்டும் ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்த திமுகவினர், இறுதியில் இன்று சட்டசபைக்கு, தாங்களே செல்வதில்லை என முடிவெடுத்துக் கொண்டு வீட்டில் தங்கி விட்டனர்.
ஆனாலும் திமுக, அதிமுக அரசு மேற்கொண்ட எவ்வித நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரித்து வந்துள்ளது. அதுவே மிகப்பெரிய விஷயமாக தற்போது கருதப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முக ஸ்டாலின் நேற்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை போலவே, நிவாரணம் கேட்டு அறிக்கையை இன்று வெளியிட, அதில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு பதிலாக 9 பேர் இறந்து இருக்கிறார்கள் என தவறுதலாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இதனை உடனடியாக அவர் நீக்கி விட்டாலும் அதற்குள் இந்த டுவிட்டானது வேகமாக பரவி விட்டது. தவறான தகவலை பரப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தவறான செய்தியை பரப்பி பதற்றத்தினை உண்டாக்க வேண்டாம் என டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக ரஜினி தவறான தகவல்களை தெரிவித்ததால் ட்விட்டரில் அவருடைய பதிவு நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்டாலின் தவறான தகவலை பரப்பியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா களேபரங்களுக்கு மத்தியிலும் பொய் செய்தி பரப்பிய ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக FakeNewsStalin என்ற ஹாஷ்டாக் ஆனது ட்ரெண்டாகி வருகிறது. அரசியல் பகை எவ்வளவு இருந்தாலும் கட்சி பேதமின்றி அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.
English Summary
DMK leader stalin twit with false information