ஆளுக்கு 2 சீட்டு., திமுக கூட்டணியின் இரண்டு கட்சிகளுக்கு., தொகுதி பங்கீட்டை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், மூன்றாவதாக ஒரு கூட்டணியும்தமிழகத்தில் தயார் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, விசிக-வுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த குழு முதல்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி முடிந்துள்ளது. திமுக தரப்பில் 18 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் 25 முதல் 30 தொகுதிகள் கேட்டதாக தெரிகிறது. இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 

இதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் நேற்று திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள், "தொகுதி பங்கீடு குறித்து நாளை (இன்று ) அறிவிப்பார்" என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இன்று மாலை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியது. அதன்படி, 

காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதிகளும், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் 
மதிமுக 04, 
விசிக 04, 
இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 02 
மமக கட்சிக்கு 02, 
கொமதேக கட்சிக்கு 03,
இதர கட்சிக்கு 06 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK IUML MNM Alliance final


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal