ஆட்சியில் பங்கா? அதிகாரப் போட்டியா? திமுக - காங்கிரஸ் இடையே முற்றும் மோதல்!
DMK Congress Tussle Power Sharing or Power Struggle
கடந்த இரண்டு மாதங்களாகத் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி தரப்பு தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுத்தாலும், திமுக பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட்டு நிதானம் காட்டி வருகிறது.
அதிகாரக் கோரிக்கை: 1967-க்குப் பின் அதிகாரத்தை இழந்த காங்கிரஸ், இழந்த கௌரவத்தை மீட்க அமைச்சரவையில் பங்கும், 45 தொகுதிகளும் வேண்டும் என அடம்பிடிக்கிறது.
விஜய் காரணி: அதிக இடங்கள் கிடைக்காவிட்டால், இளம் நிர்வாகிகள் விஜய்யின் தவெக-வுக்குச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தைக் காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவித்துள்ளது.
வரலாற்று ஆதங்கம்: 1984, 1991, மற்றும் 2006-ல் திமுக தங்களைப் பயன்படுத்திக் கொண்டதாகக் காங்கிரஸ் கருதுகிறது. குறிப்பாக 2021-ல் தங்களின் வெற்றி சதவீதம் (25-இல் 18 வெற்றி) திமுக-வை விட அதிகம் என அவர்கள் வாதிடுகின்றனர்.
வார்த்தைப் போர்: மாணிக்கம் தாகூர் போன்றோர் திமுக-வை விமர்சிக்க, அமைச்சர்கள் ரகுபதி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் அதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
திமுக-வின் ‘வெயிட்டிங்’ வியூகம்:
"ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது" என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பிப். 22-ல் பேச்சைத் தொடங்கி, சிறு கட்சிகளை முடித்துவிட்டு, இறுதியில் காங்கிரஸை நெருக்கடிக்குத் தள்ளி குறைந்த இடங்களை ஏற்க வைக்கத் திமுக வியூகம் வகுக்கிறது. பிப். 24 முதல் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வரும் சூழலில், இந்தக் கூட்டணிச் சச்சரவு தேர்தல் களத்தைச் சூடாக்கியுள்ளது.
English Summary
DMK Congress Tussle Power Sharing or Power Struggle