3 நாள் முன்பே எச்சரித்தும் மு.க. ஸ்டாலின் தூங்கினாரா? சாத்தனுர் அணை விவகாரத்தில் புதிய திருப்பம்! - Seithipunal
Seithipunal


ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்; அணையிலிருந்து நீரை வெளியேற்றலாம் என 29.11.2024 அன்றே மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) எச்சரித்ததாகவும், ஆனால், 29, 30ஆம் தேதிகளில் ஆழ்ந்து உறங்கிவிட்டு, 1ஆம் தேதி நள்ளிரவில் தண்ணீரை திமுக அரசு திறந்துவிட்டு உள்ளதாகவும் பாமகவை சேர்ந்த அருள் இரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சாத்தனூர் அணை பேரிடர்: மத்திய நீர் ஆணையம் 3 நாள் முன்பே எச்சரித்தும் திமுக அரசு செயல்படாதது ஏன்? மு.க. ஸ்டாலின் தூங்கினாரா?

ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்; அணையிலிருந்து நீரை வெளியேற்றலாம் என 29.11.2024 அன்றே எச்சரித்தது மத்திய நீர் ஆணையம் (Central Water Commission)! 

29.11.24 மற்றும் 30.11.24 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும். இதனால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். கீழ்ப்புறப் பகுதிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு நீரை வெளியேற்றலாம் என மத்திய நீர் ஆணையம் தனது சிறப்பு வெள்ள அறிவிப்பில் தமிழக அரசுக்கு தெரிவித்தது (Special Flood Advisory for Tamil Nadu).

ஆனால், 29, 30ஆம் தேதிகளில் ஆழ்ந்து உறங்கிவிட்டு, 1ஆம் தேதி நள்ளிரவில் தண்ணீரை திறந்துவிட்டது திமுக அரசு!

சாத்தனூர் அணையில் நவம்பர் 29 அன்று 117.60 அடி நீர் இருந்தது. டிசம்பர் 2 அதிகாலை 2.45 மணிக்கு 118.95 அடியாகவே இருந்தது. இக்காலத்தில் அணைக்கு நீர்வரத்து 430 கன அடியாகவும் வெளியேற்றம் 550 கன அடியாகவும் மட்டுமே இருந்தது!

மத்திய நீர் ஆணையம் எச்சரித்த பின்னரும் - இடைப்பட்ட 3 நாட்களில் சாத்தனூர் அணையின் நீர் அளவை தமிழ்நாடு அரசு குறைக்கவே இல்லை!

மத்திய நீர் ஆணையம் சிறப்பு வெள்ள எச்சரிக்கையை வழங்கிய பின்னரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை நிரம்பும் முன்னரே தண்ணீரைத் திறந்து விடாதது ஏன்? மு.க. ஸ்டாலின் தூங்கினாரா?

மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள எச்சரிக்கையை எச்சரிக்கையை குப்பையில் வீசிவிட்டு, திமுக அரசு அலட்சியம் காட்டியதன் காரணமாகவே திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை பெருவெள்ளத்தில் மூழ்கின.

இந்த மனிதப் பேரிடருக்கு மு.க. ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone Fengal Sathanur Dam Flood DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->