துரோகி ஓபிஎஸ்-க்கு என்னுடைய இடது கையே போதும்.. கொந்தளித்த சி.வி சண்முகம்..!!
Cve shanmugan criticized Ops
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொது குழுவில் இருந்து ஓபிஎஸ் தரப்பினர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையின் கதவை உடைத்து பொருட்களையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றினர். இந்த ஆவணங்கள் அனைத்தும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
அதிமுகவின் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து ஆவணங்களையும் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.

இதனை அடுத்து இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி அனைத்து ஆவணங்களும் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்ட சி.வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வரை எந்த கழகம் கொடுத்து அழகு பார்த்தது அந்தக் கழகத்தின் கோவிலை போன்ற அலுவலகத்தை அடைத்து உடைத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் செருப்பு வைத்து விட்டு சென்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.
என்னை இடது கையாள் என கூறி வருகிறார். எங்கள் ஊர் பக்கம் ஒன்று சொல்லுவார்கள் மூஞ்சில பீச்சாங்கைய வைக்க. கமல் நடித்த படத்திலும் அதை பார்த்திருப்பீர்கள். இப்படிப்பட்ட துரோகிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் இந்த இடது கையை போதும்" என தனது இடது கையை தூக்கி காட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலடி தந்துள்ளார்.
English Summary
Cve shanmugan criticized Ops