#கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் : சொந்த ஊரில் குவிக்கப்பட்ட போலீசார்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தில் தொடர்ந்து, இன்று ஏழாவது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். 

மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் ஐந்தாவது நாள் கலவரமாக மாறியது, இதில் பள்ளி வளாகம் மற்றும் பள்ளியின் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

மேலும், போலீசரின் வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டது. மாணவி மரணித்த நாள் முதல் இன்று வரை ஏழாவது நாளாக அவரின் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று மாணவியின் மறு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், மாணவியின் பெற்றோரிடம் அவரின் உடல் ஒப்படைக்கப்பட இன்று வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக பெரிய நெசலூர் கிராமத்தில் எஸ்பி சக்தி கணேஷ் தலைமையில் 596 போலீசார் மற்றும் 150 சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore periya nesalur school girl death issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->