பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு பிரதமர், குடியரசுதலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்த கடலூர் பெண்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விதவை ஒருவர் தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வேண்டும் என புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திலும் குடியரசு தலைவர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார்.

அவரின் அந்த மனுவில், "கடலூர் மாவட்டம் ,புவனகிரி வட்டம், தென்கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த தி. வேம்பரசி (வயது 36). நான் வசித்து வந்த கூரை வீடு கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக எனது வீடு முற்றிலும் சேதமடைதுள்ளது. இதனால் நான் என் தாய் வீட்டிலும், அண்டை அயலார் வீட்டில் வசித்து வருகிறன்.

எனது கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு தமிழக அரசின் எந்தவிதமான உதவியும் கிடைக்க வில்லை. மேலும் தமிழக அரசின் சிறப்பு நலத்திட்ட பலன்களும் கிடைக்க வில்லை என்பதை எனது பாரத பிரதமர் மற்றும் மேதகு குடியரசு தலைவரின் தனி கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன். 

கடலூர் மாவட்டத்தை பொறுத்த வரை மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் அல்லது மாநில அரசின் திட்டமாக இருந்தாலும் உண்மையான  பயனாளிக்கு கிடைப்பது இல்லை. மாறாக தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் அரசியல் கட்சி நிருவாகிகள் தான் பயனாளிகளை தேர்வு செய்து, அரசு அலுவளகர்களுக்கு  அனுப்பிவைப்பதன் பட்டியல் படியே திட்டங்கள் வழங்கபடும் நடைமுறை தான் தமிழகத்தின் நிலை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்படி வீடு வழங்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் , புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் என பல்வேறு அரசு அலுவலகர்களிடம் மனு கொடுத்தும் எனக்கு வீடு வழங்கவில்லை. மாறாக மன உளைச்சல் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.

எனவே, எனது உண்மை நிலையை உணர்ந்து எனக்கு நமது பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore lady petition to pm modi


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal