மதுராந்தகம் கூட்டத்தில் வாய்சவடால் வேண்டாம்: பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் 10 சரமாரி கேள்விகள்!
CPI Challenges PM Modi Answer for the Injustice to Tamil Nadu
பிரதமர் நரேந்திர மோடியின் மதுராந்தகம் வருகையை முன்னிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அரசியல் நேர்மை இருந்தால், மேடையில் பாரதியையும் வள்ளுவரையும் மேற்கோள் காட்டுவதை விடுத்து, கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரிப் பங்கு: தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ₹1 வரியிலும், மாநிலத்திற்குத் திரும்புவது வெறும் 29 காசுகள் மட்டுமே. ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு ₹2.73 வழங்கப்படுவது எந்த வகையில் நியாயம்?
பேரிடர் நிதி: மிக் ஜாம் புயலுக்கு ₹37,907 கோடி கேட்ட நிலையில், வெறும் ₹276 கோடி மட்டும் வழங்கி வஞ்சித்தது ஏன்? பெஞ்சல் புயல் நிவாரண நிதி குறித்து ஏன் இன்னும் மௌனம் காக்கிறீர்கள்?
மெட்ரோ முட்டுக்கட்டை: சென்னை மெட்ரோவிற்கான நிதி ஒதுக்கீட்டில் உண்மை நிலையை விளக்குவதோடு, மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது ஏன்?
கல்வி நிதி முடக்கம்: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ₹2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்து முடக்குவது அதிகார வெறியல்லவா?
மொழி நிதி: சமஸ்கிருத வளர்ச்சிக்கு ₹2,533 கோடி ஒதுக்கிய பாஜக அரசு, தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்குச் சேர்த்து வெறும் ₹147 கோடி மட்டுமே ஒதுக்கியது ஏன்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நீக்கிவிட்டு, "ஜி-ராம்ஜி" (VB-GRAMG) என்ற பெயரில் 1.33 கோடி தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பது ஏன்?
வாய்சவடால்களால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. இந்தத் துரோகங்களுக்குப் பதில் சொல்லாவிட்டால் மக்கள் அளிக்கும் தண்டனை கடுமையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CPI Challenges PM Modi Answer for the Injustice to Tamil Nadu