எஸ்.பி - கலெக்டர் அதிரடி நடவடிக்கை…! புகையிலை கடத்தல் வழக்கில் மூவர் கைது...!
SP and Collector take swift action Three arrested tobacco smuggling case
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் ரகசியமாக கடத்திய வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42), வடிவேல்முருகன் (44) மற்றும் மகேஷ்வரன் (30) ஆகிய மூவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மூவரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பினார்.
அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அளித்த பரிந்துரையை ஏற்று, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சட்டவிரோத புகையிலை கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த மூவரும் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை, மாவட்டத்தில் சட்டவிரோத புகையிலை வியாபாரத்திற்கு எதிரான காவல்துறையின் கடும் எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
English Summary
SP and Collector take swift action Three arrested tobacco smuggling case