சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை - சித்தராமையா
Consideration to relocate Chinnaswamy Cricket Stadium to another location Siddaramaiah
RCB அணி 18 வருடத்திற்குப் பிறகு IPL கோப்பையை இம்முறை வென்றது. இதையடுத்து RCB அணிக்கு பிரம்மாண்டமாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் காவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கடுமையாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Consideration to relocate Chinnaswamy Cricket Stadium to another location Siddaramaiah