கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினர்.. சொன்னதை செய்த டி.கே சிவகுமார்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா மற்றும்  துணை முதல்வராக டி.கே சிவக்குமார் ஆகியோர் கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் விதானசவுதா வளாகத்தை கோமியம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு முன் கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிகே சிவக்குமார் "இந்த பாஜக அரசுக்கு இன்னும் 40 முதல் 45 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்கு மேல் அவர்கள் ஆட்சியில் இருக்க மாட்டார்கள்.

 

பாஜக அரசு நடையை கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. அவர்கள் போனதும் டெட்டால் கொண்டு விதான சவுதாவை சுத்தம் செய்வோம். அதே போன்று கோமியத்தை வைத்து விதான் சவுதாவை சுத்தம் செய்ய வேண்டும். விதான் சவுதாவை விட்டு இந்த பொல்லாத அரசு போக வேண்டும். அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் வரப்போகிறது. உடனே அமைச்சர்களை மூட்டை கட்டச் சொல்லுங்கள்" என பேட்டி அளித்திருந்தார்.

அப்போது அவர் கூறியபடியே இன்று கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் விதானசவுதா வளாகத்தை கோமியம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர். வளாக பகுதியில் கோமியத்தை தெளித்து காங்கிரஸ் கட்சியினர் நீண்ட நேரம் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் சிலர் டெட்டால் தெளித்தும் சுத்தம் செய்தனர். கர்நாடக சட்டசபையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம் தான். இதற்கு முன் எலுமிச்சை மந்திரித்து வைத்த சம்பவங்கள் கூட நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress party cleaned Karnataka assembly by cow urine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->