மோடி வழியை பின்பற்றுங்கள்! அண்ணாமலைக்கு கே.எஸ் அழகிரி அட்வைஸ்! - Seithipunal
Seithipunal


திமுக அரசு தமிழ் மொழிக்கு முடிவுரை எழுதுகிறது என குற்றம் சாட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மைக்குகளுடன் அண்ணாமலை அருகே சென்று பேட்டி எடுக்க முயன்றபோது அவர்களை நோக்கி அண்ணாமலை ஆவேசமாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. அண்ணாமலை செய்தியாளர்களை நோக்கி "சாப்பிட செல்லும்போது நான் என்ன சொன்னேன்? மரியாதையாக நின்று நீங்கள் எல்லாம் சாப்பிடுங்கள் என்று சொன்னேனா? ஊரில் நாய், பேய், சாராயம் விற்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்கள்" என்று காட்டமாக பேசிவிட்டு சென்றார் 

அண்ணாமலை செய்தியாளர்களை நோக்கி ஆவேசமாக பேசிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பத்திரிகையாளர் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் அண்ணாமலை நடந்து கொண்டதற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி "மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும். மோடி வழியில் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக் கொள்வது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு நல்லது." என விமர்சனத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Ks alagiri advised to bjp annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->