சபாநாயகருக்கு அடுத்த நெருக்கடி.!! குஷியில் ராகுல் காந்தி.! காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு.!!
Congress decides to write letter to Speaker to withdraw Rahul Gandhi disqualification
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப்.,இல் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி சமூகம் குறித்த அவதூறான வகையில் பேசியதாக காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீது குஜராத் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் சூரத் நீதிமன்றமும் குஜராத் உயர்நீதிமன்றமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், தனக்கு இடைக்காலம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது தான விசாரணை இன்று நடைபெற்ற போது ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவதூறு வழக்கில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் என்பதை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டதற்கான காரணத்தை நீதிமன்றங்கள் விளக்கம் அளிக்கவில்லை என்பதனை அடிப்படையாகக் கொண்டு தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்த சில மணி நேரத்தில் இதனை அடிப்படையாகக் கொண்டு மக்களவை செயலாளருக்கு இன்றே கடிதம் எழுதப்படும் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை மக்களவைச் செயலகம் திரும்ப பெற்றால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வரும் இந்த சூழலில் ராகுல் காந்தியின் வருகை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கி உள்ளதால் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
English Summary
Congress decides to write letter to Speaker to withdraw Rahul Gandhi disqualification