முத்தத்தை பாலியலாக மாற்ற வேண்டாம்.! பாஜவுக்கு காங்கிரஸ் அட்வைஸ்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமாக பேசினார்.

ராகுல் காந்தி பேசும் போது பாஜக எம்பிக்கள் கடும் அமாலியில் ஈடுபட்டனர். அதை பொறுப்பெடுத்தாமல் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ராகுல் காந்தி பேசி முடித்தவுடன் மக்களவையில் ஃபிளையிங் கிஸ் கொடுத்து அங்கிருந்து சென்றார்.

இந்த விவகாரத்தை தற்பொழுது பாஜக பெண் எம்பிக்கள் கையில் எடுத்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி "பெண்கள் மீது வெறுப்பு கொண்ட நபரால் தான் இப்படி செய்ய முடியும். இது போன்ற கண்ணியம் குறைவான செயலை நான் இதுவரை நாடாளுமன்றத்தில் பார்த்ததில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் சோபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் மனு அளித்துள்ளார். பாஜகவின் இத்தகைய நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் "தயவு செய்து ஒரு முத்தத்தை பாலியல் ரீதியில் பார்க்க வேண்டாம். நாங்கள் எங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறோம். எங்கள் பெரியவர்களை முத்தமிடுகிறோம்..எங்கள் பாலின நண்பர்கள் அனைவரையும் முத்தமிடுகிறோம், நமது சகோதரர்கள், சகோதரிகள், கணவர்கள், மனைவிகள் மற்றும் பங்குதாரர்களை முத்தமிடுகிறோம் மற்றும் அடிப்படை உணர்ச்சிகள் தான் தூய்மையானது. உங்களால் வேறு ஏதேனும் தவறு இருந்தால் கண்டுபிடிங்கள்" எனவும்,

"முத்தத்தில் பெண் வெறுப்பு என்றால் என்ன? அப்பா தன் குழந்தைகளை, மகளை, அம்மாவை முத்தமிடுவதில்லையா? ராகுல் காந்தியை பற்றி பேசி மூளையை தூக்கி எறியும் மகிளா மோர்ச்சாவில் உங்கள் முன்னோடியாக மாறாதீர்கள்" என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress advice to BJP Do not turn kissing into sex


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->