பிகார் தேர்தல் வெற்றி காற்று தமிழகத்திலும் வீசுகிறது: கோவை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு! - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட்டு, "பிகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது" என்று பேசினார்.

மாநாட்டுக்கு தாமதமாக வந்ததற்காக நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிரதமர், அவரது உரையை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்த்துத் தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமரின் உரை:

"நான் இங்கே மேடையில் வந்தபோது விவசாயிகள் துண்டை சுழற்றிக்கொண்டு இருக்கிறார்கள். பிகார் காற்று இங்கும் வீசுகிறதோ எனத் தோன்றியது."

கோவையைப் பாராட்டு: மருதமலையில் குடிகொண்டிருக்கும் முருகனுக்குத் தலை வணங்குகிறேன். கோவை என்பது கலாசாரம், கனிவு, கவின்படைப்புத் திறன் ஆகியவற்றைக் கொண்ட பூமி. இது தென் பாரதத்தின் தொழில்முனைவு ஆற்றலின் சக்தி பீடம் ஆகும்.

சி.பி. ராதாகிருஷ்ணன்: கோவையைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக இருந்து, நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். கோவை ஜவுளித்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore PM Narendra Modi Bihar wind is blowing in Tamil Nadu BJP DMK


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->