மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய முதலவர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கையை செய்து கொள்ள வேண்டும் என்று, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையைக் குறிப்பிட்டு, அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேர்வுகளில், நேரடி விமான சேவையில்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதன் காரணமாக பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்ப்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கோவிட் கால "விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்" உடன்படிக்கையை செய்து கொள்ள வேண்டும்" என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin letter to central minister nov


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->