முதல்வர் விஜய் பதவியேற்பு எதிரொலி: தமிழக முதல்வரின் அலுவலக பக்கத்தில் ஒரே நாளில் நடந்த அதிசயம்! மிரள வைத்த பாலோயர்ஸ் எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களான “CMOTamilNadu” பக்கங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அபார வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள், அரசு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், தலைவர்கள் சந்திப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும் “CMOTamilNadu” என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (Twitter/X) தளங்களில் தனிப்பட்ட பக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் முன்பு, இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 4.1 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்தனர். ஆனால் விஜய் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் பாலோயர்களின் எண்ணிக்கை திடீரென 10 லட்சத்தை எட்டியது. தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்குள் இந்த எண்ணிக்கை 14 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் எக்ஸ் தளத்திலும் “CMOTamilNadu” பக்கத்தின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ளது. விஜய் பதவியேற்பு விழா, ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த காட்சிகள், தலைமைச் செயலகம் சென்றது, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது உள்ளிட்ட புகைப்படங்கள் இந்த பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

மேலும், தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏவாக விஜய் பதவியேற்ற காட்சிகள், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த தருணங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

இந்த பதிவுகளுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்திருந்த புகைப்படம் மட்டும் எக்ஸ் தளத்தில் 1.22 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது.

விஜய் ஏற்கனவே நடிகராக இருந்த காலத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் ஆதரவை பெற்றிருந்தார். பின்னர் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு கட்சிக்கென தனி சமூக வலைத்தள பக்கங்களும் உருவாக்கப்பட்டன. தற்போது முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து அந்த ஆதரவு அதிகாரப்பூர்வ அரசு சமூக வலைத்தள பக்கங்களிலும் பிரதிபலித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay swearing in reaction A miracle happened on the Tamil Nadu Chief Minister office page in a single day The number of followers was shocking


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->