கூட்டணியில் யாரும் அடிமை இல்லை; அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பழனிச்சாமி பேசலாம்..? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி..!
Chief Minister MK Stalins response to Edappadi Palaniswami talk about slavery
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா மார்க்சிஸ்ட் சார்பில் சென்னையில் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
சமீப காலமாக எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட்கள் மேல் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது என்றும், நாட்டில் யார் யார் எதைப் பற்றி பேசுவது என்பது இல்லை. கண்டதெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடிமைத்தனத்தை பற்றி இபிஎஸ் பேசலாமா..? அவருக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.
அத்துடன், இபிஎஸ் செய்தித்தாள் படிக்கிறாரா என அனைவருக்கும் சந்தேகம் உள்ளது என்றும், இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையை படிக்கும் பழக்கம் இருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அதனை படித்து இருந்தால் இப்படி பேச மாட்டார் என்றும், அக்கட்சி தலைவர்கள் டிவி விவாதங்களில் பேசுவதை தான் பார்க்கிறதாகவும், அக்கட்சியினர் சுட்டிக்காட்டுவதில் உடன்பாடானது எது என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கூட்டணி இருக்கிறது என்பதற்காக அவர்கள் சுட்டிக்காட்டாமல் இருந்தது இல்லை என்றும், சுட்டிக்காட்டுவதினால் தான் அதனை புறக்கணித்ததும் இல்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், எங்களின் பாதி கம்யூனிஸ்ட் என்றும், தனது பெயரே ஸ்டாலின் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நட்பு சுட்டல் எது..? உள்நோக்கத்துடன் பரப்பப்படும் அவதூறு எது..? என்பதை பிரித்து தங்களுக்கு பார்க்க தெரியும் என்றும், கொள்கை தெளிவும், நட்பின் புரிதலும் கொண்டவர்கள் நாங்கள் என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், ஏகாதிபத்திய சதி என்பது போர் தொடுப்பது மட்டும் அல்ல. இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தது இதே சதிதான் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இதனை பாஜ அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி இதற்கு வெளிப்படையான பதிலளிக்க வேண்டும் என்றும், 05-வது சுற்று வர்த்தக பேச்சு முடிந்து 06-வது சுற்று பேச்சு நடக்க உள்ள நிலையில், எதற்காக டிரம்ப் தன்னிச்சையாக வரியை உயர்த்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். இது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பிரதமர் பதில் சொல்லவில்லை என்றும், இது பலவீனத்தின் அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய சதியை முறியடிக்க இதேபோன்ற ஒற்றுமையுடன் நாம் இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் மேலும் பேசியுள்ளார்.
English Summary
Chief Minister MK Stalins response to Edappadi Palaniswami talk about slavery