கூலி படத்தின் ticket விலை அதிகம் என்று புகாரளித்த ரசிகர்கள்...!
Fans complained that ticket price movie Coolie too high
திருச்சி மாவட்டம் திரையரங்குகளில் ''கூலி'' திரைப்பட டிக்கெட்டுகள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டுமுன் வைத்துள்ளனர்.

இதில் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் டிக்கெட் ரூ.130ஆக இருந்தது.இந்நிலையில் ''கூலி'' படத்திற்கு ரூ.190க்கு டிக்கெட் விற்பனை என புகார் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இத்திரைப்படம் வருகிற 14ம் தேதி வெளியாகிறது.
English Summary
Fans complained that ticket price movie Coolie too high