நாகர்கோவில் ஸ்பெஷல் உளுந்து சோறு செய்வது எப்படி?
how to make ulunthu soru
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி
கருப்பு உளுத்தம் பருப்பு
பூண்டு
நல்லெண்ணெய்
வெந்தயம்
தேங்காய் எண்ணெய்
சீரகம்
உப்பு
தேங்காய்
கறிவேப்பிலை
செய்முறை:-
முதலில் அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலில் உளுந்தை போட்டு நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து பெரிய விட்டு போன்று சேர்ந்து வதக்கி கொள்ளவும்.
இதனுடன் ஊற வைத்த அரிசி, வறுத்த உளுந்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன் தண்ணீர் வற்றியதும் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான உளுந்து சோறு தயார்.