இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகீலா பரபரப்பு புகார்!
Actress Shakila complaint against watermelon star Divakar
சென்னை காவல் ஆணையரகத்தில் நடிகை ஷகீலா, இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் மீது புகார் அளித்துள்ளார்.
தன் சமூகத்தை குறிப்பிட்டு, நெல்லை படுகொலை சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் யூட்யூப் சேனலில் பேட்டி அளித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மற்றொரு பேட்டியில் யூட்யூப் பிரபலம் ஜி.வி. முத்துவின் சமூகத்தை சுட்டிக்காட்டி, அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என திவாகர் கூறியதாகவும், இது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான செயல் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
திவாகர் தொடர்ந்து சமூக அமைதியை குலைக்கும் விதத்தில் பேட்டி அளித்து வருவதாகக் கூறி, அவருக்கு எதிராக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க நடிகை ஷகீலா காவல்துறையை வலியுறுத்தினார்.
English Summary
Actress Shakila complaint against watermelon star Divakar