சி.பி.எஸ்.இ.-யில் 'முத்தலாக்' பாடங்கள் நீக்கம்: புதிய கிரிமினல் சட்டங்கள் சேர்ப்பு..! - Seithipunal
Seithipunal


மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் (சி.பி.எஸ்.இ.) யில் உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, அடிப்படை சட்ட அறிவு கிடைக்கச் செய்யும் வகையில், 2013 - 14-ஆம் ஆண்டு முதல், சட்டப்படிப்பு பாடம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்த, 'முத்தலாக்' உள்ளிட்ட பழைய சட்டங்களை நீக்கிவிட்டு, புதிய கிரிமினல் சட்டங்கள் தொடர்பான பாடங்கள், வரும் 2026 - 27 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

முன்னைய பாடத்திட்டத்தில் ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட அச்சட்டங்களில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றது போல் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.

அதன்படி, இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' என, ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், கடந்த ஆண்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, இந்த சட்டங்களை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் சேர்க்க, அவ்வாரியத்தின் பாடத்திட்டக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் இடம்பெற்றிருந்த முத்தலாக், அவதுாறு உள்ளிட்ட பழைய சட்டப்பிரிவுகள் தொடர்பான பாடத்திட்டங்கள் நீக்கப்பப்பட்டு, புதிய சட்டங்கள் தொடர்பான பாடங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New criminal laws to be included in CBSE syllabus


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->