தெரு நாய்கள் தொல்லையால் அவஸ்தை: உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் புதிய உத்தரவு..! - Seithipunal
Seithipunal


உணவுக்காக நாய்கள் உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதால் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க மிச்சமான உணவுகளை மூடிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக, நாடு முழுதும் முதியோர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ரேபிஸ் நோய் தாக்கியும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு உணவுக்காக நாய்கள் உள் நுழைவதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, உயர் நீதிமன்ற வளாகம் முழுதும் மூடிய குப்பைத் தொட்டிகளை அமைத்து, அதில் மட்டுமே மிச்சமான உணவுகளை கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எந்த சூழ்நிலையிலும் திறந்த வெளியிலோ அல்லது மூடப்படாத குப்பைத் தொட்டிகளிலோ உணவை கொட்டக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டார்.  அதாவது, வாயில்லா ஜீவன்கள் மீதான இந்த நடவடிக்கை கொடூரமானது, இரக்கமற்றது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மனிதாபிமான, அறிவியல் பூர்வமாக பின்பற்றப்பட்டு வந்த பல ஆண்டு கொள்கையிலிருந்து பின்வாங்குவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெருநாய்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல. தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு போன்றவற்றால், நாய்களை கொடுமைப்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று மேலும், குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New order inside Supreme Court premises due to stray dog problem


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->