கூலி படம் வெற்றி பெற ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த லோகேஷ் கனகராஜ்...!
Lokesh Kanagaraj visited Rameswaram see success film Coolie
இன்னும் 2 நாட்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,படம் வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான், சத்யராஜ் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால்,இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வருகிற 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
English Summary
Lokesh Kanagaraj visited Rameswaram see success film Coolie