தாறுமாறான தக்காளி தோசை - எப்படி செய்வது?
how to make tomato dosai
தினமும் ஒரே மாதிரியான தோசை செய்து சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காததால் வெரைட்டி தோசை செய்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தக்காளி தோசை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
புழுங்கல் அரிசி
தக்காளி
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
சோம்பு
நல்லெண்ணெய் உப்பு
செய்முறை:-
முதலில் அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்துக் கொள்ள வேண்டும். நன்கு ஊறிய பிறகு இதனுடன் காய்ந்த மிளகாய், தக்காளி, சோம்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த மாவை இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து தோசைக்கல்லில் தோசை போல் வார்த்து இருபக்கமும் வெந்தவுடன் எடுத்தால் சுவையான தக்காளி தோசை தயார்.