பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் படுகொலை.!!
Chhattisgarh BJP executive killed by Maoists
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த மாதம் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்ற முடிந்த பிறகு டிசம்பர் 3ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குகள் என்ன பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திற்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கரில் உள்ள நாராயன்பூர் மாவட்ட பாஜக துணை தலைவர் ரத்தன் தூபே சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ரத்தன் துபேவை மாவோயிஸ்டுகள் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chhattisgarh BJP executive killed by Maoists