செய்தி சேனல் நீக்கம்! கருத்து சுதந்திரதிற்கு ஒடுக்குமுறை! சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!
Chennai Press Club condemn to TN Govt cable PT News
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன.
தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.
புதியதலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்படுள்ளதாக நிர்வாக தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.
English Summary
Chennai Press Club condemn to TN Govt cable PT News