யார் நீ? எந்த நியூஸ் சேனல்? செய்தியாளரை மிரட்டிய மேயர் பிரியா!
Chennai mayor priya news viral video
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க இருந்த நேரத்தில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அங்குவந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம் செய்தியாளர் ஒருவர் ஆதாரத்துடன் கேள்வி எழுப்ப, அதற்க்கு மேயர் பிரியா இது பிளிச்சிங் பவுடர் இல்லாமல் பாண்ட்ஸ் பவுடரா? நீ யார்? உன் செய்தி நிறுவனத்தின் பெயர் என்ன? என மிரட்டும் வகையில் பேசி சென்ற காணொளி வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் கொள்முதல் செய்திருக்கும் பிளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். சுண்ணாம்பு தெளிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
புகார்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், பிளீச்சிங் பவுடரின் தரம் பற்றியும் தனிப்பட்ட விசாரணை நடத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
English Summary
Chennai mayor priya news viral video