தேங்காய் திருடன் ரஜினிகாந்த்.! நடிகர் செந்தில் பாணியில் பலே சம்பவம்.!
chennai koyampedu coconut robbery
இரவு நேரத்தில் தேங்காய்களை திருடி, பகல் நேரத்தில் கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்து வந்த திருடனை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.
திரைப்படத்தில் செந்தில் - கவுண்டமணி நகைச்சுவை காட்சி ஒன்றில் நடிகர் கவுண்டமணி தேங்காய் வியாபாரம் செய்து வருவார். அவரிடம் இருந்து தேங்காயை திருடி, நடிகர் செந்தில் தனிகடை ஒன்றை போட்டு, பெரிய வியாபாரியாக மாறிவிடுவார். இதே காட்சியை போல சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேகே நகர் 80 அடி சாலையில் லிங்கம் என்பவர் சாலையோரம் இளநீர் கடை நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து தேங்காய்களை தார்பாய் போட்டு மூடி விட்டு செல்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக மூடி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய்கள் திருடு போய் வந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

இதனால், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், சாலிகிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர்தான் தேங்காய்களை திருடி வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ரஜினிகாந்தும் இளநீர் கடை வைத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டதால் பல கடைகளில் தேங்காய்களை இளநீர்களை திருடி அதனை கோயம்பேடு சந்தையில் விற்று, பெரிய வியாபாரியாக உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
chennai koyampedu coconut robbery