தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு வார்டுகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடம்  இடஒதுக்கீடு என்ற சட்டம் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு, 200 வார்டுகளில் 105 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. 

இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, எனவே தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தில் மொத்த இடங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால், அரசியலமைப்பின் சட்டத்தை மீறக்கூடாது. இதனடிப்படையில் மண்டல வாரியான ஒதுக்கீடு செய்யும் தமிழக அரசின் இந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், "பெண்களுக்கு பாதி இடஒதுக்கீடு என்பதை மனுதாரர் எதிர்க்கவில்லை. எனவே, 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்திக்கொள்ளலாம். ஆனால் மொத்த வார்டுகளில் அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order for corporation election ward reservation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->