மோசடி வழக்கில் திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எச்சரிக்கை உடைத்த சிறப்பு நீதிமன்றம்!
Chennai DMK Minister Ma Subramaniyan case
சென்னை தொழிலாளர் காலனியில் உள்ள சிட்கோ நிலம் குறித்து தொடரும் வழக்கில், அமைச்சர் மா. சுப்பிரமணியனின் நேரில் ஆஜராகாமை தொடர்பாக, சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே 23 ஆம் தேதியும் அவர் ஆஜராகவில்லை என்றால், அவரின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
இந்த வழக்கின் மையக் குற்றச்சாட்டுப்படி, மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்த காலத்தில், சிட்கோவின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயரில் மாற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 2019ல் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மா. சுப்பிரமணியன், தனது மீதான வழக்கை ரத்து செய்ய முயன்றும், உயர் நீதிமன்றம் அந்த மனுவை கடந்த மார்சில் நிராகரித்தது. வியாழக்கிழமை வழக்கு விசாரணையில் அமைச்சர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜராகாததை நீதிமன்றம் கண்டித்தது.
அமைச்சரவை கூட்டம் காரணமாக வர முடியவில்லை என தெரிவித்தாலும், நீதிபதி இதை ஏற்காமல், வரும் மே 23ல் இருவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இல்லையெனில், சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai DMK Minister Ma Subramaniyan case