செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி! 3வது வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தற்போது 7வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது பண மோசடி உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கின் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 வாழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chargesheet filed against Senthil Balaji in money laundering case


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->