இது அநியாயம்., மத்திய-மாநில அரசுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதாக செய்தி வெளியாகியது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. 

இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக அரசு முறைப்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாணவர் சான்றிதழ்களுக்கான கட்டணத்திற்கு  ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Certificate tax issue ttv warn


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal