சான்றிதழ் வந்தாச்சு... பதவியும் வந்தாச்சு...! - பரபரப்புகளுக்கு இடையே எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றார் கீர்த்தனா...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று உற்சாகமான அரசியல் சூழலில் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவை தொடங்கியதும், முதல்-அமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்து, “தமிழக மக்களுக்காக தன்னை இயந்திரமாக மாற்றிக்கொண்டு உழைக்கும் தலைவர்” என புகழாரம் சூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. முதலாவதாக முதல்-அமைச்சர் விஜய் உறுப்பினராக உறுதிமொழி ஏற்று, பின்னர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.அவரைத் தொடர்ந்து அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இந்த நிலையில், சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, ஆரம்பத்தில் வெற்றிச் சான்றிதழை கொண்டு வராத காரணத்தால் பதவியேற்காமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சான்றிதழுடன் மீண்டும் அவைக்கு வந்த அவர், உறுப்பினராக பதவியேற்றார்.அதேபோல், தவறுதலாக வேறு சான்றிதழை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படும் கே.சி.கருப்பணன் உள்ளிட்ட சில உறுப்பினர்களும் தாமதமாக பதவியேற்றனர்.இதற்கிடையே, சி.வி.சண்முகம் உறுப்பினராக பதவியேற்காதது அவையரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

certificate arrived and post arrived Keerthana took oath MLA amidst excitement


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->