2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் மத்திய அரசு தீவிரம்; இதற்கான மசோதா இந்த வாரம் தாக்கல்..? - Seithipunal
Seithipunal


2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை அதிகரித்து, உயர்த்தப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை நடத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியலமைப்பை திருத்தம் செய்து தொகுதி மறுவரையறை ஆணைய மசோதாவை இந்த வாரம் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒத்திசைவு ஏற்படுத்த ஆலோசனை நடத்தியுள்ளார். இவ்வாறு தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 816 ஆக உயரும்.அதன்படி, உயர்த்தப்பட்ட 816 தொகுதிகளில் பெண்களுக்கு 273 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு புதிதாக திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி, உத்திரப் பிரதேசத்தின் நாடாளுமன்ற பலம் 80லிருந்து 120ஆக உயர வாய்ப்பு உள்ளது. அதேப்போன்று மஹாராஷ்டிராவில் நாடாளுமன்ற பலம் 48லிருந்து 72ஆகவும், பீகாரில் 40லிருந்து 60ஆகவும் அதிகரிக்கும். இந்த தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகள் 39லிருந்து 59ஆக உயர வாய்ப்புள்ளது.

கடந்த 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்களில் பலம் கணிசமாக குறையும். உயர்த்தப்படும் 816 நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 1971 மக்கள்தொகை புள்ளிவிவரப்படி கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி, அதிக மக்கள் தொகையுடைய வடமாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றாலே மக்களவையில் பெரும்பான்மை கிடைக்ககூடும். வட இந்தியாவில் தொகுதிகள் கணிசமாக உயரும். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென் மாநிலங்களில் பெயரளவுக்கே தொகுதிகள் எண்ணிக்கை மாறும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிப்பதாக மறுவரையறை அமையும் என குறிப்பிட்டு, ஏற்கனவே தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட 07 மாநில முதலமைச்சர்கள், தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார்.

அதேபோன்று, 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளது. 2011 அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் அதிக மக்கள்தொகை உள்ள வடமாநிலங்களுக்கு சாதகமாக அமையும். என்றும், தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டு ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Government moves ahead with constituency delimitation based on the 2011 census


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->