திகாரில் இருந்த ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை - தமிழிசை பதிலடி! - Seithipunal
Seithipunal


திமுக எம்பி ஆ.ராசாவுக்கு, பாஜக தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்துள்ள பதிலில், "ராசா அவர்களே... தேர்தல் வாக்குறுதி தொடர்பாக... தமிழக மக்களின் மனதைத்தான் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள்   பிரதிபலித்தார்கள்...

முதலில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் தூய்மையான அமைச்சராக வலம் வரும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு திகாரில் இருந்த உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. ஆனாலும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு முன்னால்  உங்கள் மனசாட்சியோடு விவாதியுங்கள்நீட் பரீட்சையை நீக்க முடியாது என்று தெரிந்தும் அப்பட்டமாக முதல் கையெழுத்து என்று பொய் சொன்னீர்களே.. முதலில் அதை  விவாதியுங்கள் 

அடுத்து உங்கள் விவாதங்களை டாஸ்மாக் வாசலில்  வைத்துக் கொள்ளுங்கள்.. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று முதல்வர் தன் வீட்டிற்கு முன்னால் ஏன் நின்று கருப்புக்கொடி ஏந்தினார் அது என்ன ஆனது என்று விவாதியுங்கள். 

உங்கள் விவாதத்திற்கு பாதிக்கப்பட்ட தாய்மார்கள் காத்திருக்கிறார்கள் . அவர்களிடம் விவாதம் செய்ய உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா 

அதே தாய்மார்களுக்கு உதவுகிறேன் என்று 100 ரூபாய் gas  மானியம் கொடுப்போம் என்று சொன்னீர்களே... அவர்களிடம் சென்று அதை விவாதிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா 

ஒப்பந்தத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர்கள் ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள் என்று அந்த வாக்குறுதிகளை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள் முதலில் அவர்களிடம் சென்று உங்களால் விவாதிக்க முடியுமா...

மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என்று சொன்ன வாக்குறுதிக்காக மாணவரிடம் சென்று முதலில் விவாதியுங்கள்.... பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவேன் என்று நீங்கள் ஏமாற்றிய அரசு ஊழியர்களிடம் சென்று முதலில் அதைப் பற்றி விவாதிகள்....

நீங்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள் பொய் சொல்லி திரிகிறீர்கள் என்று தமிழ் மக்களுக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்... 2026 இல் தோல்வியை சந்திக்க தயாராக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Tamilisai Reply DMK A Rasa


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->