பாஜக சார்பில் தொகுதிக்கு 03 பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை தயாரிக்க திட்டம்..!
BJP plans to prepare a list of candidates with 03 names for each constituency
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு இறுதியானதும் ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக சார்பில், ஏ, பி, சி என 03 பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள முக்கிய வேட்பாளர், மாற்று தேர்வாக உள்ள இரண்டாம் நிலை முகம், கடைசி நேர மாற்றங்களுக்கானவர் என 03 பேரை தேர்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள், மாவட்ட செயலாளர்கள், சமூக ஆதரவு கொண்டவர்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் வாக்கு வித்தியாசம், எதிர்ப்பு அலை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
BJP plans to prepare a list of candidates with 03 names for each constituency