திமுகவின் ஐடி விங்காகச் செயல்பட மறுக்கும் ஊடகங்களை மிரட்டும் ஆளும் அரசின் இந்தப் போக்கு சரியல்ல - நயினார் கண்டனம்!
BJP Nayinar Condemn to DMK MK Stalin Govt
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "பண்பாட்டைப் பறிக்க பத்திரிகைகளை மிரட்டும் பாசிசத் திமுக அரசு!
திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபமேற்ற இரண்டாவது நாளாகத் திமுக அரசு தடைவிதித்ததைக் குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தியை மிரட்டும் தொனியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிவிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழர் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் ஒரே நோக்கத்தைக் கொண்டு நீதிமன்ற உத்தரவை மீறியதோடு மட்டுமல்லாது, உண்மைச் செய்தியை வெளியிட்ட பழம்பெருமைமிக்க ஒரு பத்திரிகை நிறுவனத்தைக் குற்றஞ்சாட்டுவது வரை அனைத்து பாசிச நடவடிக்கைகளிலும் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
அதிலும் உண்மையை உரத்துக் கூறி, திமுகவின் ஐடி விங்காகச் செயல்பட மறுக்கும் ஊடகங்களை மிரட்டும் ஆளும் அரசின் இந்தப் போக்கு சரியல்ல!
ஜனநாயக தேசத்தில், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்க முற்படும் திமுக அரசு, தனது சர்வாதிகாரப் போக்காலேயே வரும் சட்டமன்றத் தேர்தலில் சரிவைச் சந்திக்கும்! இது நிச்சயம்!
English Summary
BJP Nayinar Condemn to DMK MK Stalin Govt