கை கட்டி, வாய் பொத்தி... கட்சியை, தொண்டர்களை திமுகவிடம் அடமானம் வைத்து விட்டு... திருமாவளவனுக்கு பாஜக கேள்வி! - Seithipunal
Seithipunal


பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்தியில், ‘விடுதலை சிறுத்தைகள் எந்த வகையிலும் வலிமை பெற்றுவிட கூடாது என்று கருதுபவர்களின் எண்ணிக்கைதான் இங்கு அதிகமாக உள்ளது. நாம் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவாகிவிட கூடாது என்று பலரும் நினைக்கின்றனர். நம்மை வாழ்த்துவதற்கோ ஊக்கப்படுத்துவதற்கோ யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.  

இவை அனைத்தையும் தாண்டித்தான்  25 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் நாம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக தாக்குப்பிடித்து நிற்கிறோம்’ என்றெல்லாம் புலம்பித் தள்ளியிருக்கிறார் தொல்.திருமாவளவன் அவர்கள். 

விடுதலை சிறுத்தைகள் எந்த வகையிலும் வலிமை பெற்று விடக்கூடாது என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கருதுகின்றன என்பதை தான் பூடகமாக சொல்கிறார். 

'அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி'  என்ற கொள்கையை கட்சி தொண்டர்களுக்கு சொன்னவர், திமுகவிற்கு அடங்கிப் போய், அத்து மீற மறுத்து, திமுக வின் எதேச்சதிகாரத்திற்கு பணிந்து  திருப்பி அடிக்க முடியாமல் கை கட்டி, வாய் பொத்தி சுயநலத்திற்காக கட்சியை, கொள்கையை, தொண்டர்களை திமுகவிடம் அடமானம் வைத்து விட்டு பிற்போக்கை எதிர்க்கிறோம், வலது சாரியை எதிர்க்கிறோம் என்றெல்லாம் வீர வசனம் பேசுவது வேடிக்கை. 

கட்சியை வர்த்தக நிறுவனமாகிக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் போட்டியிட சில இடங்களை பெற்றுக்கொண்டு அதற்கு மேல் நிதியையும் பெற்றுக்கொண்டு தன்னை நம்பி வந்த தொண்டர்களை நட்டாற்றில் தவிக்க விட்டது தான் திருமாவளவன் அவர்களின் 25 ஆண்டு கால சாதனை. தன்னை நம்பி உள்ளவர்களை காப்பாற்ற, பாதுகாக்க பல்வேறு வாய்ப்புகள் இருந்தும், உருவாக்காமலும் சுயநல அரசியலை முன்னெடுத்ததாலேயே இந்த புலம்பல்" என்று கடுமையாக சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp narayanan say about dmk vck alliance seat sharing


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->