இது ஹிந்தி திணிப்பு இல்லையா? தமிழின விரோதம் இல்லையா? இதான் திராவிட மாடலா? பாஜக கேள்வி!
BJP Narayanan condemn to DMK Mk Stalin govt
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோவிலுக்கு சொந்தமான இடத்திலேயே மலை உச்சியில் தீபம் ஏற்றினால், இஸ்லாமிய மக்களின் மனம் புண்படும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தீபம் ஏற்ற தடை விதிக்கும் அரசு, பல்வேறு மலைகளின், குன்றுகளின் உச்சியில் எந்த அனுமதியுமின்றி வைக்கப்பட்டிருக்கும் சிலுவைகளால் பெரும்பான்மை மக்கள் புண்படும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று அவற்றை அகற்ற நடவடிக்கை ஏடுக்காதது ஏன்?
ஒரு கண்ணுக்கு வெண்ணெய் மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்பது தான் திராவிட மாடலா?
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வந்த தமிழர்களை உள்ளூர்க்காரர்கள் இல்லை, மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்பவர்கள் தான், நீதியரசர் ஜி. ஆர். ஸ்வாமிநாதன் அவர்களை பதவி நீக்க, ஹிந்தி பேசும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் கையெழுத்து வாங்கி ஆதரவு கேட்கிறார்கள். ஒரு தமிழரின் தீர்ப்பை, தமிழர்களின் கோரிக்கையை எதிர்க்க ஹிந்திக்காரர்களின் கையெழுத்து மட்டும் வேண்டுமா?
இது ஹிந்தி திணிப்பு இல்லையா?
இது தமிழின விரோதம் இல்லையா?
இது தான் திராவிட மாடலா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to DMK Mk Stalin govt