பொங்கல் பண்டிகையை கொண்டாடிய காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்து - பாஜக கண்டனம்!
BJP Narayanan Condemn to DMK MK Stalin Govt
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள கண்டான் அறிக்கையில், "பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்து.
திராவிட பொங்கல், சமத்துவ பொங்கல் என்றெல்லாம் கூக்குரலிடுபவர்களுக்கு காவல் துறையினர் திராவிடர்களாக, சமத்துவம் உள்ளவர்களாக தெரியவில்லையா?
காவல் துறையினரை மனிதர்களாக நினைக்காமல், அவர்களுக்கும் விருப்புகள் உண்டு என்றெண்ணாமல், அவர்களை ஏவலாளிகளாக கருதும் ஆதிக்க மனப்பான்மை அகல வேண்டும். உடனடியாக பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
BJP Narayanan Condemn to DMK MK Stalin Govt