உடல் நலக்குறைவு; அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!
Minister Duraimurugan has been admitted to Apollo Hospital in Chennai
அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் துரைமுருகன் (வயது 86). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English Summary
Minister Duraimurugan has been admitted to Apollo Hospital in Chennai