'கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசவோ, பதிவிடவோ கூடாது'; காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் அட்வைஸ்..!
Rahul advised Congress leaders not to speak publicly about the alliance
ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நடந்த, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் போது கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல்காந்தி அறிவுறுத்தியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
அத்துடன், " கூட்டணி குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை இடக்கூடாது. தலைமை எடுக்கும் முடிவுக்கு மாநில காங்கிரஸ் கட்டுப்பட வேண்டும்" என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul advised Congress leaders not to speak publicly about the alliance