அதிர்ச்சி வீடியோ: அரசுப் பள்ளி மாணவர்களை கிள்ளுக் கீரையாக இந்த விடியா திமுக அரசு பயன்படுத்தி வருகிறது - வானதி சீனிவாசன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மல்லாக்கோட்டை அரசு ஆரம்பப்பள்ளி கழிவறையை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைத்தது மிகவும் கண்டனத்திற்குரியது.

நேற்று இதேபோல்  கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழத்தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேல்நிலை நீர்த்தொட்டியை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்ததும், அதேபோல் திருவாரூர், பவித்ரமங்கலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு டப்பா திமுக அரசில் ஓடும் டப்பா பேருந்தை தள்ள வைத்த சம்பவமுமாக என தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களை கிள்ளுக் கீரையாக இந்த விடியா திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. 

மாண்புமிகு பாரதப் பிரதமர் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களைச் சந்தித்து தேர்வு பயத்தினைப் போக்கி தன்னம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்கிற அதேவேளையில் இங்குள்ள மக்கள் விரோத திமுக அரசோ மாணவர்களையும் விட்டு வைக்காமல் கழிவறை முதற்கொண்டு சுத்தம் செய்ய வைத்து கல்வி கற்றுக் கொடுக்காமல் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறது. 

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதை விட்டு விட்டு இப்படி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லா சூழலில் மாணவர்களை வேலை வாங்குவது குழந்தைத் தொழிலாளர் முறையைக் காட்டிலும் கொடியது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே ஒவ்வொரு தொகுதியாக நீங்கள் சென்று அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்த லட்சணம் இதுதானா? கல்வி பயில வரும் மாணவர்களை ஆசிரியர்களும் இதுபோன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவது முறையன்று" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP MLA Vanathi Srinivasan condiment to DMK govt school issue


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->